நன்றி: டிவிட்டர்/ஐபிஎல்
நன்றி: டிவிட்டர்/ஐபிஎல்

கடைசி ஓவரில் மீண்டும் வாரி வழங்கிய உமேஷ்: ஹைதராபாத் அணி 175 ரன்கள் குவிப்பு!

பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்துள்ளது. 


பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்துள்ளது.  

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) 2-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஹைதராபாத் அணிக்கு சாஹா மற்றும் கப்தில் அதிரடி தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் 4 ஓவரில் 44 ரன்கள் குவித்தது. நவ்தீப் சைனி வீசிய 5-வது ஓவரில் சாஹா முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பிறகு, கப்தில் அதிரடியாக ரன் சேர்க்க பாண்டே சற்று திணறினார். 

இந்த நிலையில் 8-வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் கப்தில் மற்றும் மணீஷ் பாண்டேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு விஜய் சங்கர் மற்றும் வில்லியம்ஸன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். ஒரு கட்டத்தில் விஜய் அதிரடிக்கு மாறினார். ஆனால், அந்த நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். எனினும் கேப்டன் வில்லியம்ஸன் 20-வது ஓவர் வரை பேட்டிங் செய்து அந்த அணியின் ஸ்கோரை 170 ரன்களை கடக்கச் செய்தார். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஹைதராபாத் அணி 28 ரன்கள் எடுத்தது. 

இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்ஸன் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்கள் எடுத்தார்.   

பெங்களூரு அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் கேஜ்ரோலியா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com