வியாழக்கிழமை 18 ஜூலை 2019

உலகக் கோப்பைப் போட்டி பாண்டியாவுக்குச் சிறப்பாக அமையும்: யுவ்ராஜ் சிங் நம்பிக்கை

By எழில்| DIN | Published: 04th May 2019 04:37 PM

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பாண்டியா அற்புதமாக விளையாடி வருகிறார். 13 ஆட்டங்களில் 380 ரன்கள் எடுத்துள்ளார். 1 அரை சதம். 29 சிக்ஸர்கள். 12 விக்கெட்டுகள்.

இதையடுத்து ஒரு நிகழ்ச்சியில் பாண்டியாவை மிகவும் புகழ்ந்து பேசினார் யுவ்ராஜ் சிங். அவர் பேசியதாவது:

நான் நேற்று பாண்டியாவிடம் சொன்னேன், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுவதால் உலகக் கோப்பைப் போட்டி உனக்குச் சிறப்பாக அமையும் என்றேன். 

ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடி வருகிறார் பாண்டியா. இந்த ஃபார்மை அவர் உலகக்கோப்பைக்கும் நீட்டிக்கச் செய்வார் என நம்புகிறேன். உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். பாண்டியா தற்போது பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அவருக்கு அற்புதமான உலகக் கோப்பைப் போட்டி அமையவுள்ளது. 

கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் நான் பார்த்ததில் இதுவே சிறந்த ஆட்டம். நான்கு சிறந்த பந்துவீச்சாளர்களை அருமையாக எதிர்கொண்டதால் அவ்வாறு கூறுகிறேன் என்று பாராட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Hardik Pandya Yuvraj Singh

More from the section

2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை
உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?
1983 உலகக் கோப்பை இந்தியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்
நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா தோல்வி
இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று பயிற்சி ஆட்டம்