செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

இலக்கை விரட்டுவதில் கில்லியாக இருக்கும் கே.எல். ராகுல்: பயன்படுத்தத் தவறிய பஞ்சாப்!

By எழில்| DIN | Published: 01st May 2019 12:30 PM

 

கடந்த திங்களன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், பஞ்சாப்புக்கு எதிராக 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத். அந்த அணியின் வெற்றிக்கு வார்னர், ரஷித் கான், கலீல் அகமது முக்கியப் பங்காற்றினார்கள். முதலில் ஆடிய ஹைதராபாத் 212 /6 ரன்களையும், இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 167 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து தோற்றது. 5 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 79 ரன்களுக்கு கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல்.

இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வார்னருக்கு அடுத்த 2-ம் இடத்தில் உள்ளார் ராகுல். வார்னர் 692 ரன்கள் எடுக்க, ராகுல் 520 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 5 அரைசதம். 20 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 131.64. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் டாப் 10 பட்டியல் குறைந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார் ராகுல். கடந்த வருடம் போல இந்த வருடம் ராகுலால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியாமல் போனாலும் கவனமுடன் விளையாடி ரன்கள் சேர்த்து வருகிறார்.

கடந்த வருடம் 659 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பெற்றார். 6 அரை சதங்கள். 32 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 158.41. முதல் 10 வீரர்களில் அதிக ஸ்டிரேக் ரேட் உள்ள வீரர்கள் ரிஷப் பந்துக்கு அடுத்ததாக 2-ம் இடம் பிடித்தார் ராகுல். 

இலக்கை விரட்டுவதில் பஞ்சாப் அணிக்குப் பெரிய பலத்தை அளிக்கிறார் ராகுல். இலக்கை விரட்டிய கடந்த 13 இன்னிங்ஸில் 10 அரை சதங்கள் எடுத்துள்ளார். 801 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 151.99. கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் இலக்கை விரட்டும்போது வேறு எந்த வீரரும் ராகுல் அளவுக்கு அதிக ரன்களை எடுத்ததில்லை. எனினும் இந்த வருடம் ஸ்டிரைக் ரேட் குறைவாக உள்ளதாலோ என்னவோ, இந்த 13 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே பஞ்சாப் வெற்றி பெற்று 8 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. 

ஆனால் ராகுலின் இந்தப் பங்களிப்பை பஞ்சாப் அணி இந்த வருடம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7-ம் இடம் பெற்றது. இந்த வருடமும் 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில்தான் உள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்களே மீதமுள்ளன. 

ராகுல் - கடந்த 13 இன்னிங்ஸில் இலக்கை விரட்டியபோது எடுத்த ரன்கள்

51 
60 
32 
84* 
95* 
66 
94 

71* 
55 
71* 
42 
79

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : KL rahul

More from the section

2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை
உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?
1983 உலகக் கோப்பை இந்தியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்
நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா தோல்வி
இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று பயிற்சி ஆட்டம்