செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி! (விடியோ)

By எழில்| DIN | Published: 01st May 2019 10:40 AM

 

மழையால் பாதிக்கப்பட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் எந்தவித முடிவும் இன்றி நிறைவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. எனினும் டாஸ் முடிந்தவுடன் தீவிரமாக மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவது தடை பட்டது. இரவு 11.05 மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 5 ஓவர்களாக குறைத்து போட்டியை நடத்த முடிவு செய்தனர்.

 5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை குவித்தது பெங்களூரு. 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசிய கோலியை அவுட்டாக்கினார் ஷ்ரேயாஸ் கோபால். தொடர்ந்து மூவரை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் கோபால். 

63 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சன்-லிவிங்ஸ்டோன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் 3 ஆவது ஓவர் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசிய சாம்சனை அவுட்டாக்கினார் சஹல். அப்போது 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. 

ராஜஸ்தான், பெங்கர் என இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது. மழையால் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.  இதனால் கடைசி ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 அப்போதும் ராஜஸ்தான் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இதர அணிகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதனால் அந்த அணியின் பிளேவாய்ப்பும் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத நிலையிலேயே உள்ளது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : rcb washout

More from the section

2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை
உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?
1983 உலகக் கோப்பை இந்தியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்
நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா தோல்வி
இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று பயிற்சி ஆட்டம்