ஐபிஎல்-2019

5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா அபார சாதனை!

24th Mar 2019 10:53 AM | Raghavendran

ADVERTISEMENT

 

2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை (ஏப்.23) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சிறப்பும் ரெய்னா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT