திங்கள்கிழமை 22 ஜூலை 2019

புள்ளிகள் பட்டியலில் தில்லிக்கு முதலிடம்: கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த ரிஷப் பந்த்! (விடியோ)

By எழில்| DIN | Published: 23rd April 2019 12:25 PM

 

ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தில்லி. ராஜஸ்தான் வீரர் ரஹானே சதமடித்தது வீணானது. தில்லி அணியில் ரிஷப் பந்த் 78 ரன்களை விளாசினார். 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது ராஜஸ்தான். தனது 2-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்த ரஹானே 3 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, 19.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வென்றது. தில்லி வீரர் ரிஷப் பந்த் தனது 10-வது ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.  4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 78 ரன்களை விளாசி ரிஷப் பந்த் கடைசிவரை ஆட்டமிழக்காமல்,  அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளை எடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியது தில்லி.

 

 

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : pant Rahane

More from the section

2019 ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை
உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா மலிங்கா?
1983 உலகக் கோப்பை இந்தியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்
நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா தோல்வி
இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று பயிற்சி ஆட்டம்