ஐபிஎல்

ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுப் பெற்ற கேப்டன்கள் விவரம்

DIN

ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா 3வது இடம் பிடித்துள்ளார். 

நேற்று நடந்த ( மே-29) ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய பாண்டியா 3 விக்கெட்டுகளுடன் பேட்டிங்கிலும் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.

இந்த வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள்: 

1. அனில் கும்ப்ளே- 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆர்சிபி அந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும் அவர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். 

2. ரோகித் சர்மா- 2015இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 50 ரன் அடித்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT