ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக...: புதிய சாதனை படைத்த பேட்டர்கள்

28th May 2022 01:33 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் ஒரு பருவத்தில் முதல்முறையாக 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் மீண்டும் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா, ஒபட் மெக்காய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ராஜஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பட்லர், 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இத்துடன் 4 சதங்கள் அடித்துள்ளார் பட்லர். ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் இத்தனை சதங்கள் அடிக்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு 2016-ல் 7 சதங்கள் அடிக்கப்பட்டன. மேலும் 2008, 2011, 2012, 2019 ஆகிய ஆண்டுகளில் தலா 6 சதங்கள் அடிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இந்த வருடம் பட்லர் 4 சதங்களும் ராகுல் 2 சதங்களும் ரஜத் படிதார், டி காக் ஆகியோர் தலா ஒரு சதமும் அடித்துள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள்

8* - 2022
7 - 2016
6 - 2008, 2011, 2012, 2019
 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT