ஐபிஎல்

பட்லர் மீண்டும் சதம்: கோலி சாதனை சமன்

28th May 2022 09:57 AM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் சதம் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து 106 ரன்கள் விளாசினார்.

இதையும் படிக்ககுஜராத்துடன் மோதுவது ராஜஸ்தான்: பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்

ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் இது பட்லரின் 4-வது சதம். இதன்மூலம், ஒரு டி20 தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்தார். கோலி 2016-இல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசினார். மேலும் அதே ஐபிஎல் சீசனில் அவர் மொத்தம் 973 ரன்கள் குவித்தார்.

நடப்பு சீசனில் பட்லர் 4 சதம், 4 அரைசதம் உள்பட மொத்தம் 824 ரன்கள் விளாசியுள்ளார். பேட்டிங் சராசரி 58.86, ஸ்டிரைக் ரேட் 151.47.

இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.

Tags : Jos Buttler
ADVERTISEMENT
ADVERTISEMENT