ஐபிஎல்

படிதார் அல்ல பார்டி தார் : கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

26th May 2022 12:27 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் (மே-25) ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ அணியை வீழ்த்தி குவலிஃபையர்-2க்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

ஆர்சிபி அணியில் ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்களை எடுத்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

இவரது ஆட்த்தினைக் குறித்து நிறைய கிரிக்கெட் பிரபலங்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சேவாக் : ரஜத் படிதார்.. என்ன ஒரு ஆட்டம். பார்டி தார் 

சச்சின்  : அதிரடியான ஆட்டம் ரஜத் படிதார். தினேஷ் கார்த்திக் நல்ல உருதுணையாக விளையாடினார். 

அமித் மிஷ்ரா: வேறு ஒருவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்து எலிமினேட்டர் போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்துள்ளார். ரஜத் படிதார் எல்லோரையும் பெருமைப்படுத்தி இருக்கிறார். 

வேதா கிருஷ்ணமூர்த்தி : அஜத் படிதார்... நெருப்பு எமொஜிக்கள்.. அவ்வளவு தான் இதுதான் டிவிட். 

லிசாத் தலேகர்: ரஜத் படிதார் இருக்கும்போது யாருக்கு தேவை பாஃப், மேக்ஸ்வெல், விராட். ரஜ்த் விளையாடியது ஒரு அற்புதமான ஆட்டம். 

ஹைடன் : சஞ்சு சாம்சன் செய்ய முடியாததை இவர் செய்துள்ளார். அவரது ஆட்டத்தைப் பாருங்கள். எல்லா பக்கமும் அடித்துள்ளார். குறிப்பாக நேராக நிறைய ரன்கள். இது அவருடைய நாள். 

ரவி சாஸ்திரி: மாற்று வீரராக வந்து இப்படி ஆடுவது அற்புதமானது. தைரியமான அற்புதமான ஷாட்கள். எதிரணியின் பந்துவீச்சி, சூழ்நிலை எதுவுமே அவரை தடுக்கவில்லை.  ஆர்சிபி அணியின் ஆட்டதை உயர்த்தியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT