ஐபிஎல்

முதல் 100 ஐபிஎல் இன்னிங்ஸ்: அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்?

26th May 2022 12:22 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் முதல் 100 ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் லக்னெள அணியின் கேப்டன் கே.எல். ராகுல்.

ஆர்சிபி அணிக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது லக்னெள அணி. இந்த ஆட்டத்தில் லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் 58 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

நேற்று தனது 100-வது ஐபிஎல் இன்னிங்ஸை விளையாடினார் ராகுல். இதன்மூலம் முதல் 100 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

முதல் 100 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் 

3889 - கே.எல். ராகுல் 
3626 - கெயில்
3373 - வார்னர் 
3185 - டு பிளெசிஸ் 
2901 - சுரேஷ் ரெய்னா 
2901 - ரஹானே 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT