ஐபிஎல்

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் வெல்லப்போவது யார்? : முகமது கைஃப் விளக்கம்

25th May 2022 06:34 PM

ADVERTISEMENT

 

இன்று (மே-25) நடைபெரும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி வெல்லக்கூடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கருத்துத் தெரிவித்துள்ளார். 

“என்னைப் பொறுத்தவரைக்கும் கே.எல்.ராகுல் அருமையான வீரர். எல்லாப் பக்கதிலும் பந்தை அடிக்கும் திறமையுள்ளவர். ஆனால் சேஸிங் என்று வரும்போது தன்மீது அவரே அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டு ரன்கள் அடிப்பதில்லை. அவர் கேப்டனாக பொறுப்போடு விளையாட வேண்டும். டி காக் அடித்து ஆட வேண்டும். ராகுல் கடைசி ஓவர் வரைக்கும் விளையாட வேண்டும். 

லக்னௌ புதியதாக இம்முறைதான் ஐபிஎல் விளையாடுகிறார்கள். ஆர்சிபி அனுபவம் வாய்ந்த அணி. இன்றையப் போட்டியில் ராகுல் எந்தத் தவறையும் செய்யக்கூடாது. இது அவருக்கு முக்கியமானப் போட்டி. அழுத்தத்திற்கு ஆட்படாமல் பந்தைப் பார்த்து அடித்தால் போதுமானது.

ADVERTISEMENT

பொதுவாக ஆர்சிபியின் பந்து வீச்சை விட லக்னௌவின் பந்து வீச்சு மேலானது. ஆர்சிபி ஜெயிக்க வேண்டுமானல் நிறைய சிக்ஸர்கள் அடிக்க வேண்டும். ஆனால் இந்தப்போட்டி சுவாரசியமாக இருக்கும். என்னைக் கேட்டால் இந்த இரு அணிகளில் லக்னௌ வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். வெற்றி சதவிகிதம் 60 % லக்னௌ 40% ஆர்சிபி” என முகமது கைஃப் கூறியுள்ளார்.

இன்று மாலை 7.30 மணிக்கு கொல்கத்தாவில் லக்னௌ, ஆர்சிபி அணிகள்  விளையாட இருக்கின்றது. வெற்றிப் பெற்றால் குவாலிஃபையர்-2 எனும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம். தோல்வியுற்றால் தொடரிலிருந்து வெளியேறுவர் என்பதால் இப்போட்டிக்கு எலிமினேட்டர் என்பது பெயர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT