ஐபிஎல்

மழை நின்றது: டாஸ் வென்ற ராகுல் பந்துவீச்சு தேர்வு

25th May 2022 08:05 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரவு 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கௌதம் மற்றும் ஜேசன் ஹோல்டருக்குப் பதில் கிருனால் பாண்டியா மற்றும் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு அணியில் முகமது சிராஜ் களமிறங்குகிறார்.

ஆட்டம் இரவு 8.10-க்கு தொடங்குகிறது. எவ்வித ஓவர் குறைப்பும் இல்லாமல் ஆட்டம் முழுமையாக நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT