ஐபிஎல்

ஹார்திக் பாண்டியா பற்றி ரவி சாஸ்திரி கூறியது என்ன?

25th May 2022 02:55 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் தொடரின் குவலிஃபையர்-1 போட்டியில் ( மே-24) குஜராத் டைட்டனஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை வென்று நேரடியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது.

ஹார்திக் இந்த வருடம் குஜராத் அணிக்காக நம்பர்-4இல் களமிறங்கி 14 போட்டிகளில் 453 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி -45.30. ஸ்டிரைக் ரேட் - 132.84. பவுலிங்கில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.74 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை முதன் முதலாக கேப்டனாக அறிவித்ததும் கிரிக்கெட் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்தியது. ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு அணியை ஃபைனல்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவைக் குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

ADVERTISEMENT

குஜராத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வெறி அவருக்கு உள்ளது. அவரது திறமையின் மீது அவருக்கு அபாரமான நம்பிக்கையுள்ளது. ஆட்டத்தை நன்றாகக் கணிக்கிறார். அவர் எப்போதுமே பேட்டிங் வரிசையில் மேலே விளையாட ஆசைப்படுவார். நம்பர்-4 இடத்தில் விளையாடும் வீரராகவும் அவரால் விளையாட முடியும். அவர் ஆட்டத்தின் போக்கையும், ஆடுகளத்தின் தன்மையையும் மற்றும் அவரது பங்கையும் நன்குப் புரிந்து விளையாடக் கூடியவர். அந்த அணிக்குத் தேவையானதை அவர் செய்கிறார். அவரது பேட்டிங் அவரது பொறுப்பை வெளிக்காட்டுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT