ஐபிஎல்

சிஎஸ்கேவைக் கடைசி இடத்துக்குத் தள்ள மும்பை இன்று என்ன செய்யவேண்டும்?

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடிக்கப் போகும் அணி எது?

புள்ளிகள் பட்டியலில் மும்பையும் சிஎஸ்கேவும் இதுவரை கடைசி இடத்தைப் பிடித்ததே இல்லை. ஆனால் இம்முறை இரு அணிகளில் ஒன்று எப்படியும் அந்த நிலையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் சிஎஸ்கே 8 புள்ளிகளுடன் 9-ம் இடத்திலும் மும்பை 6 புள்ளிகளுடன் 10-ம் இடத்திலும் உள்ளன.  சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் - -0.203, மும்பையின் நெட் ரன்ரேட் - -0.577.

இன்றைய ஆட்டத்தில் தில்லியை எதிர்கொள்கிறது மும்பை. 

இந்த ஆட்டத்தில் தில்லி தோற்றால் ஆர்சிபி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். வென்றால் தில்லி அணிக்கு பிளேஆஃப் உறுதி. ஏனெனில் ஆர்சிபியின் நெட் ரன்ரேட் மைனஸில் உள்ளது. ஆனால் தில்லிக்கு 0.255 என நெட் ரன்ரேட் நல்ல நிலைமையில் உள்ளது.

மும்பை அணி கடைசி இடத்தைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

முதலில் தில்லியைத் தோற்கடிக்க வேண்டும். அந்த வெற்றியும் பெரிய அளவில் இருக்கவேண்டும்.

மும்பை முதலில் பேட்டிங் செய்தால் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவேண்டும்.

2-வதாக பேட்டிங் செய்தால் எந்த இலக்காக இருந்தாலும் அதை 9 ஓவர்களில் அடைய வேண்டும்.

இதன் அடிப்படையில் பார்த்தால் மும்பை அணி கடைசி இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. எனினும் தில்லி மிக மோசமாக விளையாடினால் மும்பை அணி நினைத்ததை முடித்து 9-ம் இடத்தைப் பிடிக்கலாம், சிஎஸ்கேவைக் கடைசி இடத்துக்குத் தள்ளலாம். இன்று என்ன நடக்கப் போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT