ஐபிஎல்

கலக்குற அஸ்வின்!

DIN

வழக்கமாகப் பந்துவீச்சில் அசத்தும் அஸ்வின், இம்முறை பேட்டிங்கிலும் அசத்தி ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 

சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 93 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. ஜெயிஸ்வால் 59 ரன்களும் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கி 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை வழங்கினார் தமிழக வீரர் அஸ்வின். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் அதிக நெட் ரன்ரேட்டுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதனால் லக்னெள அணியால் 3-ம் இடத்தையே லீக் சுற்றின் முடிவில் அடைய முடிந்தது.

இந்த ஐபிஎல் போட்டியின் ஒரு பேட்டராகவும் சாதித்து வருகிறார் அஸ்வின். ஐபிஎல் 2022-ல் ரஸ்ஸலுக்கு அடுத்ததாக 150 ரன்களும் 10 விக்கெட்டுகளும் எடுத்த ஒரே வீரர் அஸ்வின் மட்டுமே. 

2009 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் அஸ்வின். இதற்கு முன்பு 2018-ல் மட்டும் அதிகபட்சமாக 14 ஆட்டங்களில் 102 ரன்கள் எடுத்தார். அதேபோல அந்த வருடம்தான் அதிகபட்சமாக 5 சிக்ஸர்கள் அடித்தார். இந்த வருடம் அஸ்வினின் பேட்டிங் திறமை பலபடிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுவரை விளையாடிய 14 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 183 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 146.40. இதுதவிர 9 சிக்ஸர்கள்.

பந்துவீச்சிலும் குறைவைக்கவில்லை. 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 7.14.

ராஜஸ்தான் அணியில் முக்கியமான நடுவரிசை வீரராக இந்த வருடம் சாதித்து வருகிறார் அஸ்வின். நேற்றைய ஆட்டத்தில் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றியை வழங்கினார். இதுபோல எல்லாவிதமான பணிகளையும் பொறுப்புடன் ஏற்கும் ஒரு வீரராகப் பெயர் பெற்றுள்ளார் அஸ்வின்.

அஸ்வினால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சரியாக விளையாட முடியுமா என்கிற கேள்விக்கு இந்த வருட ஐபிஎல்-லில் பதில் கொடுத்துள்ளார். இந்திய அணிக்குத் தேர்வாக வேறு எந்தத் தடையும் இனி இருக்க முடியுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT