ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன்: தோனி

20th May 2022 07:41 PM

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. அதில், டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது தோனி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன். சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாமல்ல. ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது.

சென்னையில் விளையாடாமல் மும்பை மைதானத்தில் நன்றி கூறி விடை பெறுவது சரியாக இருக்காது என்றார்.

தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்கிற கருத்து நிலவியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்திருப்பது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 4ல் வெற்றியும், 9 தோல்வியும் பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக சிஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரை விட்டு வெளியேறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT