ஐபிஎல்

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக சிக்ஸர்கள்!

16th May 2022 02:00 PM

ADVERTISEMENT

 


ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை 885 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வேறு எந்த வருடத்திலும் இத்தனை சிக்ஸர்கள் அடிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு 2018-ல் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதன் சாதனையை இந்த வருட ஐபிஎல் முறியடித்து விட்டது. 

ADVERTISEMENT

இன்னும் லீக் ஆட்டங்கள் முடிய ஒரு வாரம் மீதமுள்ளது. அதற்குப் பிறகு பிளேஆஃப் ஆட்டங்கள். எனவே முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் 900 சிக்ஸர்கள் அடிக்கப்படுவது உறுதி.

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 37 சிக்ஸர்களுடன் பட்லர் முதலிடத்திலும் 32 சிக்ஸர்களுடன் ரஸ்ஸல் 2-ம் இடத்திலும் லிவிங்ஸ்டன் 29 சிக்ஸர்களுடன் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT