ஐபிஎல்

சென்னைக்கு எதிரான போட்டியில் ஹெட்மையர் விளையாடுவார்

16th May 2022 05:14 PM

ADVERTISEMENT

 

புணே (மஹாரஷ்டிரா) : தனது குழந்தையைப் பார்க்க சொந்த நாட்டிற்குச் சென்றிருந்த ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மையர் இந்தியா திரும்பினார்.  

ஹெட்மையர் மே 8ம் தேதி தனது மனைவியின் முதல் குழந்தைப்பேற்றுக்கு அங்கு இருக்க வேண்டுமென கயானாவிற்குச் சென்றார்.

11 இன்னிங்ஸில் 291 ரன்களுடன் சராசரி 72.75களுடன் ஸ்டிரைக் ரேட் 166.28இல் விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT

ஐபிஎல் இன் விதிப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

லீக் ஆட்டத்தின் கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் அணி சென்னை அணியுடன் மோதவிருக்கிறது. இந்தப்போட்டியில்  ஹெட்மையர் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT