ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து ரஹானே விலகுகிறாரா?

16th May 2022 04:44 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஹானே, காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடி 133 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 103.91.

இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ரஹானே விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தடுப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறவுள்ளார். 

ADVERTISEMENT

இந்தக் காயம் காரணமாக இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ரஹானே இடம்பெறுவது கடினம் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்கான சிகிச்சையை அவர் மேற்கொள்ளவுள்ளார். 

Tags : Rahane
ADVERTISEMENT
ADVERTISEMENT