ஐபிஎல்

யுஏஇ டி20 லீக்: புதிய அணியை விலைக்கு வாங்கிய நைட்ரைடர்ஸ் குழுமம்

12th May 2022 03:59 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக யுஏஇ டி20 லீக் போட்டி தொடங்கப்படவுள்ளது. இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டியில் ஆறு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. லீக் சுற்றில் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

ஆறு அணிகளில் ஓர் அணியை நைட்ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. அபுதாபி அணியை வழிநடத்தவுள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு அபுதாபி நைட்ரைடர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நைட்ரைடர்ஸ் குழுமத்தின் 4-வது டி20 லீக் அணியாகும். 

பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கானும் ஜுஹி சாவ்லாவும் இணைந்து 2008-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை விலைக்கு வாங்கினார்கள். சிபிஎல், யு.எஸ். டி20 போட்டி ஆகியவற்றிலும் நைட்ரைடர்ஸுக்கு சொந்தமாக ஓர் அணி உள்ளது.  யுஏஇ லீக் டி20 போட்டியின் 6-வது உரிமையாளர் இவர்கள். இந்தியாவின் அதானி, காப்ரி குளோபல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஓர் அணியைப் பெற்றுளன. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT