ஐபிஎல்

சிவம் மாவியின் ஒரு ஓவரில் திருப்புமுனை ?

8th May 2022 11:45 AM

ADVERTISEMENT

புனே: ஐபில் 2022ன் 53வது ஆட்டத்த்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சாளர் சிவம் மாவியின் 19வது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது பெரிய திருப்புமுனையாக இருந்தது.

கொல்கத்தா மற்றும் லக்னோவின் நேற்றைய ஆட்டத்தில் குறைவான ரன்களையே எடுத்து இருந்த லக்னோ அணியினருக்கு 19வது ஓவரில் அதிர்ஷ்டம் காத்திருந்தது. சிவம் மாவியின் முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்த மார்கஸ் ஸ்டோனிஸ், 4வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேஸன் ஹோல்டர் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்தார். ஒரு ஓவரிலே 30 ரன்களை வழங்கிய சிவம் மாவி 4 ஓவரில் 50 ரன்களை கொடுத்திருந்தார். 

177 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய கொல்கத்தா 14.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

"மோசமான தொடக்கமும் டெத் ஓவரில் அதிகமான ரன்களை வழங்கியதும் தன் தோல்விக்கு காரணம். நாங்கள் பிட்சை ஒழுங்காக கணிக்கவில்லை. 155-160 ரன்களுக்குள் கட்டுப்படுத்த எண்ணினோம்"  என்று கொல்கத்தா அணி தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.

ADVERTISEMENT

Tags : ipl kkr
ADVERTISEMENT
ADVERTISEMENT