ஐபிஎல்

அதை விடவும் இது முக்கியம்: தோனியின் வெற்றிக்கான தத்துவம்

5th May 2022 01:49 PM

ADVERTISEMENT

 

புள்ளிகள் பட்டியலில் உள்ள இடத்தைப் பற்றி நினைப்பதை விடவும் ஆட்டத்துக்கான செயல்முறையில் கவனம் செலுத்துவது முக்கியம் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். 

புணேவில் நடைபெற்ற சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. லோம்ரார் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே அணி, 8 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. கான்வே 56 ரன்கள் எடுத்தார். 

பரிசளிப்பு விழாவில் சிஎஸ்கேவின் தோல்வி பற்றி கேப்டன் தோனி கூறியதாவது:

ADVERTISEMENT

எங்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. விக்கெட்டுகளும் கையில் இருந்தன. ஆடுகளமும் ரன்கள் எடுப்பதற்கு உதவியது. ஆனால் சீரான இடைவெளியில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இலக்கை விரட்டுவது என்பது சரியான திட்டமிடலின் வழியாகவே வெற்றிகரமாக நிகழும். முதலில் பேட்டிங் செய்யும்போது உள்ளுணர்வின்படி செயல்படுவோம். மைதானத்தில் விளையாடும் பேட்டர்கள் இதை மனத்தில் கொள்ள வேண்டும். என்ன தவறு நடந்தது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். வெற்றி, தோல்விகளால் எத்தனை புள்ளிகள் அடைந்தோம் என்று பார்த்து கவனம் சிதறவிடுவது சுலபம். புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விடவும் ஆட்டத்துக்கான செயல்முறையில் கவனம் செலுத்துவது முக்கியம். செயல்முறையில் சரியாக இருந்துவிட்டால் புள்ளிகள் பட்டியலில் நாம் இருக்கவேண்டிய இடத்தை அதுவே பார்த்துக்கொள்ளும் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT