ஐபிஎல்

சஞ்சு சாம்சன் 100: ராஜஸ்தான் ராயல்ஸின் அடையாளம்

29th Mar 2022 04:50 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்றாலே சஞ்சு சாம்சன் தான் ஞாபகத்துக்கு வருவார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கடந்த மூன்று வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2019-ல் 7-ம் இடம், 2020-ல் 8-ம் இடம், 2021-ல் 7-ம் இடம் எனப் புள்ளிகள் பட்டியலில் இடம்பிடித்தது. இதனால் இந்த வருடம் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஹால், அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார். 27 வயது சஞ்சு சாம்சன், 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகப் பணியாற்றினார். 

2012-ல் கேகேஆர் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்தது. அதன்பிறகு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ராஜஸ்தான் அணியின் அடையாளங்களில் ஒன்றாக மாறினார் சஞ்சு சாம்சன். 2013 முதல் (இரு வருடங்கள் தவிர) ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். 2016, 2017 ஆண்டுகளில் தில்லி அணிக்காக விளையாடினார். 2018-ல் ரூ. 8 கோடிக்கு சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. கடந்த வருடப் போட்டியில் ராஜஸ்தானால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாமல் போனாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 484 ரன்கள் எடுத்தார். இதனால் ரூ. 14 கோடிக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு அவரைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது ராஜஸ்தான் அணி. மேலும் அணியின் கேப்டனாகவும் அவர் நீடிக்கிறார். 

ADVERTISEMENT

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் இன்று தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இது ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடும் 100-வது ஆட்டம். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணிக்காக ரஹானே, 100 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT