லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் முத்திரை பதித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 4-ம் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே புதிய அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.
டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | டாஸ் வென்றார் பாண்டியா: குஜராத் பந்துவீச்சு தேர்வு
லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். குஜராத்துக்கு முதல் ஓவரை முகமது ஷமி வீசினார்.
முகமது ஷமி வீசிய முதல் பந்து ராகுல் பேட்டுக்கு அருகே சென்று கீப்பரை அடைந்தது. நடுவர் அவுட் தராததால், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா ரிவியூ கேட்டு முறையிட்டார். ரிவியூவில் பந்து பேட்டை உரசிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனால், ராகுல் முதல் பந்திலேயே 'டக்' அவுட் ஆனார்.
இரண்டு அணிகளுக்குமே ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஆட்டம். முதல் ஆட்டத்தின் முதல் பந்து குஜராத்துக்கு அட்டகாசமாகவும் லக்னௌவுக்கு சோகமாகவும் அமைந்துள்ளது.