ஐபிஎல்

2014-ல் பும்ரா பற்றி விராட் கோலி கூறியது என்ன?: பார்தீவ் படேல்

28th Mar 2022 01:21 PM

ADVERTISEMENT

 

2014-ல் பும்ராவின் திறமையை கண்டறிய விராட் கோலி மறுத்துவிட்டார் என என விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் கூறியுள்ளார். 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (28), இந்திய அணிக்காக 2016 முதல் 29 டெஸ்டுகள், 70 ஒருநாள், 57 டி20 ஆட்டங்களிலும் 107 ஐபிஎல் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 2013-ல் முதல்தர கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அதே வருடம் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அறிமுகமானார். 

குஜராத் அணியில் பும்ரா விளையாடியபோது பார்தீவ் படேல் அவருடைய கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். ஒரு பேட்டியில் ஆரம்ப காலத்தில் பும்ராவின் திறமைகளை கண்டறிய விராட் கோலி ஆர்வம் செலுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி பார்தீவ் படேல் கூறியதாவது:

ADVERTISEMENT

2014-ல் நான் ஆர்சிபியில் இருந்தேன். பும்ரா என்றொரு பந்துவீச்சாளர் உள்ளார். அவரைக் கவனியுங்கள் என்று விராட் கோலியிடம் சொன்னேன். விடுப்பா. அந்த மாதிரி வீரர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்றார் கோலி. முதலில் குஜராத் அணியில் தேர்வானபோது 2-3 வருடங்களுக்கு ரஞ்சி கோப்பையில் விளையாடினார் பும்ரா. இரு வருடங்கள் சரியாக அமையவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்றே கூறப்பட்டது. ஆனால் மெல்ல மெல்ல முன்னேறினார். மும்பை அணி அவருக்கு ஆதரவளித்தது. அவருடைய உழைப்பும் அவருக்குக் கிடைத்த ஆதரவும் தான் இன்றைய நிலைக்குக் காரணம்  என்று கூறினார். 

Tags : Bumrah
ADVERTISEMENT
ADVERTISEMENT