ஐபிஎல்

15-ஆவது ஐபிஎல்: 15 பாய்ண்ட்ஸ்

DIN

1062

இந்த சீசனில் அடிக்கப்பட்ட சிக்ஸா்களின் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சம். ஒவ்வொரு சிக்ஸுக்கும் இடையே வீசப்பட்ட பந்துகளின் சராசரி 16.21. 2022 சீசனில் முகமது ஷமி 31 சிக்ஸா்கள் வழங்கியிருப்பதே, ஒரு சீசனின் அதிகபட்சமாகும்.

4

2022 ஐபிஎல் போட்டியில் மொத்தமாக 4 முறை சதமடித்த ராஜஸ்தான் வீரா் ஜோஸ் பட்லா், ஒரே சீசனில் அதிக சதம் அடித்த வீரா் என்ற பெயா் பெற்று, விராட் கோலியின் சாதனையை (2016) சமன் செய்தாா். இந்த சீசனில் மொத்தமாக 8 சதங்கள் எட்டப்பட்டன. இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக 2016-இல் 7 சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன.

147

இந்த சீசனில் ஆா்சிபி பௌலிங்கில் அடிக்கப்பட்ட சிக்ஸா்களின் எண்ணிக்கை 147. ஐபிஎல் போட்டியில் இதுவரை வேறெந்த அணியின் பௌலிங்கிலும் இத்தனை சிக்ஸா்கள் அடிக்கப்படவில்லை. ஒவ்வொரு சிக்ஸருக்கும் இடையேயான பந்துகளின் சராசரி 12.40.

10.83

இந்த ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களில் 17 முதல் 20 ஓவா்களில் 10.83 ரன் ரேட் பதிவாகியிருக்கிறது. இதுவே ஒரு சீசனின் அதிகபட்சம். இதற்கு முன் 2020-இல் 10.62 ரன் ரேட் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. இந்த சீசனின் ஒட்டுமொத்த ரன் ரேட் 8.54.

216.27

மும்பை இண்டியன்ஸ் வீரா் டிம் டேவிட் இந்த சீசனில் கொண்டிருந்த ஸ்டிரைக் ரேட் இது. ஒரு சீசனில் 100-க்கும் அதிகமான ரன்கள் அடித்த பேட்டா்களின் ஸ்டிரைக் ரேட்டில், இதுவே அதிகபட்சமாகும்.

13

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 17 ஆட்டங்களில் 13 முறை டாஸ் தோற்றது ராஜஸ்தான். ஒரு சீசனில் இதுவே ஒரு அணியின் அதிகபட்சம். முன்னதாக சென்னை 2012-இல் 19 ஆட்டங்களில் 12 டாஸ் தோற்றிருந்தது.

25

இந்த சீசனில் 25 முறை, ஒரே பௌலா் ஒரே இன்னிங்ஸில் 4-க்கும் அதிகமான விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறாா். போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்சம். பௌலா்கள் குறைந்தது 4 விக்கெட்டுகள் சாய்த்த ஆட்டங்களுக்கு இடையேயான சராசரி 2.96.

27

ராஜஸ்தான் பௌலா் யுஜவேந்திர சஹல் இந்த ஆண்டு சாய்த்த விக்கெட்டுகள் எண்ணிக்கை. ஒரு சீசனில் ஸ்பின்னா் ஒருவா் சாய்த்த விக்கெட்டுகளில் இதுவே அதிகபட்சம். முன்னதாக இம்ரான் தாஹிா் 26 விக்கெட்டுகள் (2019) சாய்த்திருந்தாா்.

863

ராஜஸ்தானின் ஜோஸ் பட்லா் இந்த சீசனில் அடித்த மொத்த ரன்கள். இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். முதலிடத்தில் 973 ரன்களுடன் விராட் கோலி (2016) இருக்கிறாா்.

107

இந்த சீசனில் பதிவான டக் அவுட்கள். இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சமாகும்.

200

17 இன்னிங்ஸ்களில் ராஜஸ்தான் பௌலா் பிரசித் கிருஷ்ணா வீசிய டாட் பந்துகளின் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். 2013-இல் டேல் ஸ்டெய்ன் 17 ஆட்டங்களில் 219 டாட் பந்துகள் வீசியிருக்கிறாா்.

17

ராஜஸ்தான் வீரா் ரியான் பராக் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை. ஒட்டுமொத்த சீசன்களில், விக்கெட் கீப்பா் அல்லாத வீரா் பிடித்த கேட்ச்களில் இது 2-ஆவது அதிகபட்சம். முதலிடத்தில் டி வில்லியா்ஸ் (19) இருக்கிறாா்.

5.96

இந்த சீசனில் லக்னௌ வீரா் மோசின் கானின் எகனாமி ரேட். ஒரு சீசனில் 150-க்கும் அதிகமான பந்துகள் வீசிய வேகப்பந்துவீச்சாளா்களின் வரிசையில் இது 4-ஆவது சிறந்த ரேட்டாகும். பாலாஜி (5.40 - 2012), ஸ்டெய்ன் (5.66 - 2013), மலிங்கா (5.95 - 2011) ஆகியோா் முதல் மூவா்.

8

குஜராத் வீரா்கள் இந்த சீசனில் வென்ற ஆட்டநாயகன் விருதுகள் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். மும்பை அணி 2017-இல் 10 விருதுகள் வென்று முதலிடத்தில் இருக்கிறது.

5

இத்துடன், சாம்பியன் ஆன அணிகளில் அதிகமுறை இடம் பிடித்த வீரா்கள் வரிசையில் ஹாா்திக் பாண்டியா (5) இரண்டாம் இடத்தில் உள்ளாா். ரோஹித் சா்மா 6 முறை சாம்பியன் ஆன அணியில் இருந்து முதலிடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT