ஐபிஎல்

நடப்பு தொடரில் முதல் அரைசதம் அடித்த கோலி; குஜராத் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

30th Apr 2022 05:31 PM

ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடிவருகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டார்.

குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர், ஜோடி சேர்ந்த கோலி, ராஜத் பட்டிடர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்டிடர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கவாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!...

பின்னர், வந்த மாக்ஸ்வெலும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பாக பிரதீப் சங்வான், 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT