ஐபிஎல்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு

29th Apr 2022 09:35 PM

ADVERTISEMENT

பஞ்சாப் கிங்ஸ் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. 

ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புணேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. லக்னௌவில் கேப்டன் கே.எல்.ராகுல், குவின்டன் டி காக் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 

ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா, டி காக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருப்பினும் டி காக் 47 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தீபக் ஹூடா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுக்க, எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களே சோ்த்தனா். ஓவர்கள் முடிவில் லக்னௌ 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. 

மோசின் கான் 13, ஆவேஷ் கான் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் ரபாடா 4, ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT