ஐபிஎல்

ஐபிஎல் 2022: புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

28th Apr 2022 03:22 PM

ADVERTISEMENT

 

குமார் கார்த்திகேயா சிங் என்கிற புதிய பந்துவீச்சாளரைத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியுன் முதல் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்ததில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அர்ஷத் கான், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இடக்கைச் சுழற்பந்து வீச்சாளரான குமார் கார்த்திகேயா சிங்கை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை அணி. ஏற்கெனவே மும்பை அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த குமார் கார்த்திகேயா, சிறப்பாகப் பந்துவீசி பயிற்சியாளர்களை ஈர்த்ததால் தற்போது பிரதான அணிக்குத் தேர்வாகியுள்ளார். 

ADVERTISEMENT

சனிக்கிழமை நவி மும்பையில் ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது மும்பை அணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT