ஐபிஎல்

கே.எல்.ராகுல் அதிரடி சதம்: மும்பைக்கு 169 ரன்கள் இலக்கு

24th Apr 2022 09:30 PM

ADVERTISEMENT

கே.எல்.ராகுலின் அதிரடி சதம் காரணமாக லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 

ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

லக்னௌ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவின்டன் டி காக், கேப்டன் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் டி காக் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மனீஷ் பாண்டே சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். இருப்பினும் அவர் 22 ரன்களில் வெளியேறினார்.

எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 61 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். நடப்பு சீசனில் ராகுல் அடிக்கும் 2ஆவது சதம் இதுவாகும். லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

ராகுல் 103 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT