ஐபிஎல்

குஜராத் அபார பந்துவீச்சு: 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

14th Apr 2022 11:35 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.  வேட் (12), ஷுப்மன் கில் (13) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். அதற்கடுத்து வந்த விஜய் சங்கரும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அபினவ் மனோகர் பாண்டியாவுக்கு இணை கொடுத்து ஆடியதால் அணியின் ரன் வேகம் சற்று கூடியது. 

முடிவில் குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்தது.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய     ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமலும், அஷ்வின் 8 ரன்களிலும் வெளியேறினர். 

நின்று ஆடிய ஜாஸ்பட்லர் 24 பந்துகளுக்கு 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த சஞ்சு சாம்சன் (11), டூசன் (6), ரியான் (18), ஜேம்ஸ் நீஷம் (17) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹிட்மயர் 29 ரன்களை எடுத்து ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. குஜராத் அணி தரப்பில் ஃபெர்கூச,ன் யாஷ் தயாள் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT