ஐபிஎல்

'சகோதரர்களுக்கு எதிராக விளையாடுகிறேன்': டாஸ் வென்ற டு பிளெஸ்ஸி பந்துவீச்சு தேர்வு

12th Apr 2022 07:14 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

இதையும் படிக்கமூத்த வீரர் ஷமி மீது கோபம் கொள்வதா?: பாண்டியாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் முதன்முறையாக களமிறங்குகிறார்.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தை சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவதுபோல் கருதுவதாக குறிப்பிட்ட டு பிளெஸ்ஸி, சிஎஸ்கேவைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அதுபோல தன்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை. இது சென்னையின் 200-வது ஐபிஎல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT