நவி மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. ஆர்சிபி அணி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
சிஎஸ்கேவும் ஆர்சிபியும் ஐபிஎல் போட்டியில் இதுவரை 28 முறை மோதியுள்ளன. அதில் சிஎஸ்கே அணி 18 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இதில் ஆச்சர்யமாக, தோனியும் விராட் கோலியும் மற்ற அணிகளை விடவும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு எதிராகவே ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளார்கள். இரு அணிகளும் மோதும்போது இருவருமே போட்டி போட்டிக்கொண்டு ரன்கள் எடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது.
இன்றைய போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்?
விராட் கோலி vs சிஎஸ்கே
ஆட்டங்கள் - 28
ரன்கள் - 948
சராசரி - 41.22
ஸ்டிரைக் ரேட் - 127.25
அரை சதங்கள் - 9
தோனி vs ஆர்சிபி
ஆட்டங்கள் - 31
ரன்கள் - 836
சராசரி - 41.80
ஸ்டிரைக் ரேட் - 141.22
அரை சதங்கள் - 5