ஐபிஎல்

ஐபிஎல்: பந்துகளை அதிகமாக வீணடிக்காத வீரர் யார்?

9th Apr 2022 11:31 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டி சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது.

போட்டி தொடங்கி இரு வாரங்கள் முடிந்த நிலையில் குஜராத் அணியை இதுவரை யாராலும் தோற்க முடியவில்லை. சென்னை, மும்பை, ஹைதராபாத் அணிகளால் இதுவரை ஒரு வெற்றியையும் பெற முடியவில்லை.

டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பந்துகளை வீணடிக்காமல் இருப்பதும். அதன் அடிப்படையில் ஐபிஎல் 2022 போட்டியில் குறைந்த அளவில் பந்துகளை வீணடித்த வீரராக உள்ளார் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில். 3 இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை 108 பந்துகளை எதிர்கொண்டு அதில் 20 பந்துகளில் மட்டுமே ரன் எடுக்காமல் இருந்துள்ளார். 

ADVERTISEMENT

ஷுப்மன் கில் போல பந்துகளை வீணடிக்காத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2022: குறைந்த அளவிலான பந்துகளை வீணடித்த பேட்டர்கள் (குறைந்தது 36 பந்துகளை எதிர்கொண்டிருக்க வேண்டும்)

18.52%  - ஷுப்மன் கில் (20 டாட் பந்துகள்/108 பந்துகள்)
22.50%  - டேவிட் மில்லர் (9/40)
23.64%  - மார்க்ரம் (13/55)
23.81%  - விராட் கோலி (10/42)
26.67%  - திலக் வர்மா (20/75)

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT