ஐபிஎல்

ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும்: இஷான் கிஷன்

5th Apr 2022 05:41 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் ஆட்டங்களில் ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும் எனப் பிரபல வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் அரை சதங்கள் எடுத்து மொத்தமாக 135 ரன்கள் எடுத்துள்ளார் இஷான் கிஷன். 

ஒரு பேட்டியில் ரோஹித் சர்மா பற்றி இஷான் கிஷன் கூறியதாவது:

ADVERTISEMENT

ஆட்டம் நடைபெறும்போது ஆட்டம் குறித்துக் கூர்மையாகச் சிந்திப்பார் ரோஹித் சர்மா. ஒரு பேட்டர் குறிப்பிட்ட பகுதியில் ஷாட் அடிப்பார் என நினைத்தால் அப்படியே நடக்கும். ஒரு பேட்டர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். டீப் மிட்விக்கெட்டில் ஏன் ரோஹித் சர்மா ஃபீல்டரை வைக்கவில்லை என நினைத்தேன். பேட்டர் அதேபோல டீப் மிட்விக்கெட்டில் அடிக்க நினைத்து பேட்டின் முனையில் பந்து பட்டு கேட்ச் ஆனது. இதுபோன்ற விஷயங்களை ரோஹித்திடமிருந்து கற்றுக்கொண்டேன். ராகுல் சஹார் பந்துவீசும்போது இதைப் பார்த்துள்ளேன். சஹாரின் 2, 3 பந்துகளில் பேட்டரால் ரன் எடுக்க முடியவில்லையென்றால் கிரீஸிலிருந்து இறங்கி வந்து அடிப்பார் என நான் நினைப்பேன். ஆனால் இன்னும் நன்றாகப் பந்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று சஹாருக்குச் சைகையில் ரோஹித் சொல்வார். ராகுல் சஹார் நன்றாகப் பந்துவீசியதில் ரோஹித்தின் பங்கு நிறைய உள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT