ஐபிஎல்

மும்பைக்கு எதிராக பட்லர் அபார சதம்: ராஜஸ்தான் 193 ரன்கள்

DIN

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜாஸ் பட்லர் சதமடித்து அசத்தியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்று வரும் மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை. காயத்திலிருந்து குணமானாலும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணியில் கோல்டர் நைலுக்குப் பதிலாக நவ்தீப் சைனி இடம்பெற்றுள்ளார். 

மும்பை அணி இதுவரை விளையாடிய ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் அணி ஓர் ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. 

ஜெயிஸ்வால் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் பட்லர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 32 பந்துகளில் அரை சதமடித்தார் பட்லர். 

10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.

நன்கு விளையாடி வந்த சஞ்சு சாம்சன், 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையரும் அதிரடியாக விளையாடினார். பொலார்ட் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்தார். பட்லரும் ஹெட்மையரும் 22 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இந்த இன்னிங்ஸ் முழுக்க ஒரேவிதமான அதிரடி ஆட்டத்தையும் சிலசமயங்களில் நிதானத்தையும் வெளிப்படுத்திய பட்லர், 66 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். 

14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹெட்மையர். பும்ரா வீசிய 19-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. ஹெட்மையர், பட்லரின் விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 15 பந்துகளில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 200 ரன்கள் எடுக்க முடியாமல் போனது.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா, டைமல் மில்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT