ஐபிஎல்

ராஜஸ்தானுக்கு 2-ஆவது வெற்றி

DIN

ஐபிஎல் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

இப்போட்டியில், ராஜஸ்தான் தொடா்ந்து 2-ஆவது வெற்றியை பதிவு செய்ய, மும்பை 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் அடித்தது. பின்னா் மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுத்தது. ராஜஸ்தானின் ஜோஸ் பட்லா் ஆட்டநாயகன் ஆனாா்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த ராஜஸ்தானில் அதிகபட்சமாக தொடக்க வீரா் ஜோஸ் பட்லா் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 100 ரன்கள் அடித்தாா். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். கேப்டன் சஞ்சு சாம்சன் 30, ஷிம்ரன் ஹெட்மயா் 35 ரன்கள் சோ்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. மும்பை பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, டைமல் மில்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சரித்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் இஷான் கிஷன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, திலக் வா்மா 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாச, மற்ற பேட்டா்கள் விரைவாகவே வெளியேறினா். ராஜஸ்தான் பௌலிங்கில் நவ்தீப் சைனி, யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினா்.

இன்றைய ஆட்டம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT