ஐபிஎல்

ஹார்திக் பாண்டியா அதிரடி: பஞ்சாபை வீழ்த்தியது மும்பை

28th Sep 2021 11:24 PM

ADVERTISEMENT

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத்தேர்வு செய்தார். 

அந்த அணியில் இஷான் கிஷனுக்குப் பதில் சௌரப் திவாரி, ஆடம் மில்னுக்குப் பதில் நாதன் கூல்டர் நைல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுக்குப் பதில் மந்தீப் சிங் களமிறங்குகிறார்.

இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக மார்க்ரம் 42, ஹூடா 28, ராகுல் 21 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார். 

Tags : ipl2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT