ஐபிஎல்

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள்: கோலி சாதனை!

26th Sep 2021 09:45 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிக்ககோலி, மேக்ஸ்வெல் அரைசதம்: மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 51 ரன்கள் எடுத்தார். இதில், ஜாஸ்பிரித் பும்ரா பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு 13 ரன்களைக் கடக்கும்போது டி20 கிரிக்கெட்டில் கோலி 10,000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார்.

ADVERTISEMENT

இந்த சாதனையை 314-வது டி20 ஆட்டத்தில் அவர் படைத்துள்ளார்.

Tags : virat kohli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT