ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய ஐபிஎல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 33, டி காக் 55 ரன்கள் எடுத்தார்கள்.  சுழற்பந்துவீச்சாளர்களான வருணும் நரைனும் அற்புதமாகப் பந்துவீசி மும்பை அணி அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்தார்கள். அடுத்து ஆடிய கொல்கத்தா 15.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் எடுத்தார்கள். 

நேற்றைய ஆட்டத்தில் 18 ரன்களை எடுத்தபோது புதிய ஐபிஎல் சாதனையை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. ஐபிஎல் போட்டியில் ஓர் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார். ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் செய்வதென்பது அல்வா போல. இதுவரை 29 இன்னிங்ஸில் 1015 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 46.13, ஸ்டிரைக் ரேட் - 132.16. 1 சதமும் 6 அரை சதங்களும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ஓர் அணிக்கு எதிராக மட்டும் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் டேவிட் வார்னருக்கு 2-ம் இடம். பஞ்சாப் அணிக்கு எதிராக 943 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT