ஐபிஎல்

ஆர்சிபி-க்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி

24th Sep 2021 11:21 PM

ADVERTISEMENT


பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 38 ரன்களும், அம்பத்தி ராயுடு 32 ரன்களையும் எடுத்தனர். 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராத் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராத் கோலி 53 ரன்களுக்கும், படிக்ககல் 70 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெல் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.

ADVERTISEMENT

இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கெய்க்வாட், டூ பிளெஸ்ஸி ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

கெய்க்வாட் 26 பந்துகளில் 38 ரன்களையும், டூ பிளெஸ்ஸி 26 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு வந்த மொயின் அலி 23 ரன்களுக்கு வெளியேற அம்பத்தி ராயுடு 32 ரன்களை எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரெய்னா ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், தோனி 11 ரன்களையும் எடுத்ததன் மூலம் வெற்றி இலக்கான 157 ரன்களை சென்னை அணி எட்டியது. 

இதன் மூலம் 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி வீழ்த்தியது.

Tags : dhoni IPL kholi Bangalore vs Chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT