ஐபிஎல்

டி காக் அதிரடி: பவர் பிளேவுக்குப் பின் மும்பையைக் கட்டுப்படுத்திய கொல்கத்தா!

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். முதல் 4 ஓவர்களுக்கு மார்கன் சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதால், ரன் குவிக்க மும்பை பேட்ஸ்மேன்கள் திணறினர். 

சுனில் நரைனின் 3-வது மற்றும் வருண் சக்ரவர்த்தியின் 4-வது ஓவரில் மட்டும் ரோஹித் மற்றும் டி காக்கால் பவுண்டரி அடிக்க முடிந்தது. இதன்பிறகு, வேகப்பந்துவீச்சு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் டி காக் சிக்ஸர்களைப் பறக்கவிடத் தொடங்கினார். இதனால், பவர் பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 33 ரன்களுக்கு நரைன் சுழலில் வீழ்ந்தார். இதன்பிறகு, மும்பையின் ரன் குவிக்கும் வேகம் மந்தமானது. இந்த நெருக்கடியால் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களுக்கு (10 பந்துகள்) ஆட்டமிழந்தார்.  

36-வது பந்தில் அரைசதத்தை எட்டிய டி காக்கும் 55 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த இஷான் கிஷன் 14 ரன்களுக்கு லாக்கி பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ஓவருக்கு 8.5-க்கு மேல் இருந்த ரன் ரேட் 7 ஆகக் குறைந்தது.

இந்த நிலையில், மும்பைக்கு நல்வாய்ப்பாக பிரசித் கிருஷ்ணாவின் 18-வது ஓவர் இருந்தது. கைரன் பொல்லார்ட் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க நோ பால், வைட் என அந்த ஓவரில் மட்டும் மும்பைக்கு 18 ரன்கள் கிடைத்தன.

ஆண்ட்ரே ரஸல் 19-வது ஓவரில் 1 சிக்ஸரை மட்டுமே கொடுத்ததால் அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கிடைத்தன. கடைசி ஓவரை பெர்குசன் அற்புதமாக வீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் பொல்லார்ட் (21 ரன்கள்) ரன் அவுட். மூன்றாவது பந்தில் கிருனால் பாண்டியா 12 ரன்களுக்கு அவுட் என முதல் பாதி சிறப்பாக அமைந்தது. கடைசி பந்தில் மட்டும் சௌரப் திவாரி பவுண்டரி அடித்தார். 

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா தரப்பில் லாக்கி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT