ஐபிஎல்

சிஎஸ்கே அணிக்கு எதிராக சாதனை படைப்பாரா விராட் கோலி?

23rd Sep 2021 05:32 PM

ADVERTISEMENT

 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நாளை நடைபெறுகிறது.

புள்ளிகள் பட்டியலில் சென்னை 2-ம் இடத்திலும் ஆர்சிபி அணி 3-ம் இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி, புதிய சாதனையை நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளவர், கிறிஸ் கெயில். 436 இன்னிங்ஸில் 14,261 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர், விராட் கோலி. 297 இன்னிங்ஸில் 9,934 ரன்கள். அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா. 337 இன்னிங்ஸில் 9,315 ரன்கள்.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 66 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். இதனால் நாளைய ஆட்டத்தில் விராட் கோலியின் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

Tags : Virat Kohli T20
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT