ஐபிஎல்

டு பிளெஸ்ஸி, அலி 'டக்', ராயுடு காயம்: பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை திணறல்!

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி டக் அவுட் ஆகி மோசமான தொடக்கத்தைத் தந்துள்ளனர்.

14-வது ஐபிஎல் சீசனின் இரண்டாம் பகுதி ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கின. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பையில் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாகக் களமிறங்காததால் கைரன் பொல்லார்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர்.

டு பிளெஸ்ஸி, மொயீன் அலி டக்:

டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆடம் மில்ன் வீசிய அடுத்த ஓவரில் மொயீன் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ராயுடு காயம்: 

இதையடுத்து, சுரேஷ் ரெய்னாவுக்குப் பதில் அம்பதி ராயுடு முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். மில்ன் வீசிய அதே ஓவரின் கடைசி பந்து ராயுடு கையைத் தாக்க, வலி தாங்க முடியாமல் அவர் வெளியேறினார்.

ரெய்னாவைத் திண்டாட வைத்த போல்ட்:

இதன்பிறகு, சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். போல்ட் வீசிய 3-வது ஓவரின் 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ளத் திணறிய ரெய்னா, கால் நகர்த்துவதில் திணறினார். அதிர்ஷ்டவசமாக ஒரு பவுண்டரி கிடைத்தாலும் மீண்டும் அதே மாதிரி ஷார்ட் ஆட முயற்சித்து 4 ரன்களுக்கு ரெய்னாவும் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கெய்க்வாட்டுடன் கேப்டன் தோனி இணைந்தார். அவரும் பவர் பிளேவின் கடைசி பந்தில் பவுண்டரி எல்லையில் 3 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.

பவர் பிளே முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT