ஐபிஎல்

மும்பையை வீழ்த்தியது சென்னை: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் அன்மோல்பிரீத் சிங் களமிறங்கினர்.

 3 பவுண்டரிகள் விளாசி அச்சுறுத்தலாகத் தென்படத் தொடங்கிய டி காக் (17) விக்கெட்டை தீபக் சஹார் வீழ்த்தினார். 

இதன்பிறகு, 2 பவுண்டரி, சிக்ஸர் அடித்து  அன்மோல்பிரீத் அச்சுறுத்தலாகத் தென்படத் தொங்கினார். அவரையும் 16 ரன்களுக்கு போல்டாக்கினார் சஹார். இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ஷர்துல் தாக்குர் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இஷான் கிஷன் மற்றும் சௌரப் திவாரி பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், 10-வது ஓவரை வீசிய டுவைன் பிராவோ சிறப்பான பீல்டிங் அமைப்பு மூலம் கிஷன் விக்கெட்டை வீழ்த்தினார்.

 இதனால், 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, சௌரப் திவாரியுடன் இணைந்தார் கேப்டன் கைரன் பொல்லார்ட். ரவீந்திர ஜடேஜா ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னையை மிரட்டினார் பொல்லார்ட். இந்த நிலையில் 14-வது ஓவரை வீச ஜோஷ் ஹேசில்வுட்டை அழைத்தார் தோனி. அதற்குப் பலனாக பொல்லார்ட் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிருனால் பாண்டியா 4 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

94 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் விழுந்ததால் மும்பை கடுமையான நெருக்கடியில் இருந்தது. ஆடம் மில்ன் ஒத்துழைப்பு தர வெற்றியை நோக்கி ஆடத் தொடங்கினார் திவாரி. சென்னைப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் ஓவருக்கு அதிகபட்சம் 10 ரன்களைத் தாண்டவில்லை. ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் மட்டும் அந்த அணி 15 ரன்கள் எடுத்தது.

இதனால், கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. 

கடைசி ஓவரை டுவைன் பிராவோ வீசினார். 2-வது பந்தில் மில்ன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் ராகுல் சஹார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

இதனால், மும்பை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திவாரியின் ஆட்டம் வீணானது.

சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஷர்துல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT