ஐபிஎல்

பந்துவீச்சில் சென்னை பதிலடி: 10 ஓவரில் மும்பை 62/4

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் அன்மோல்பிரீத் சிங் களமிறங்கினர்.

3 பவுண்டரிகள் விளாசி அச்சுறுத்தலாகத் தென்படத் தொடங்கிய டி காக் (17) விக்கெட்டை தீபக் சஹார் வீழ்த்தினார். இதன்பிறகு, 2 பவுண்டரி, சிக்ஸர் அடித்து  அன்மோல்பிரீத் அச்சுறுத்தலாகத் தென்படத் தொங்கினார். அவரையும் 16 ரன்களுக்கு போல்டாக்கினார் சஹார். இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ஷர்துல் தாக்குர் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, இஷான் கிஷன் மற்றும் சௌரப் திவாரி பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், 10-வது ஓவரை வீசிய டுவைன் பிராவோ சிறப்பான பீல்டிங் அமைப்பு மூலம் கிஷன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால், 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT