ஐபிஎல்

கேப்டன் தோனி நிகழ்த்திய சாதனைகள்

16th Oct 2021 11:52 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் தோனி. 

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்று ஆட்டம், தோனி விளையாடிய 300-வது டி20 ஆட்டம். 

ADVERTISEMENT

டி20 கிரிக்கெட்டில் 300 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்கிற சாதனையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளின் சமி, 200-க்கும் அதிகமான டி20 ஆட்டங்களில் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய அணிக்காக 72 டி20 ஆட்டங்களில் கேப்டனாக விளையாடிய தோனி 14 ஆட்டங்களில் வென்று 28-ல் தோல்வியடைந்துள்ளார்.

சிஎஸ்கே அணி கேப்டனாக 214 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கி 131 வெற்றிகளை அடைந்துள்ளார். 81 ஆட்டங்களில் தோல்வி.

சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில் 14 ஆட்டங்களில் புணே அணியின் கேப்டனாகப் பணியாற்றி 5-ல் வெற்றியும் 9-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

மேலும் 2010, 2011, 2018, 2021 என நான்கு ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் வென்றுள்ளது சிஎஸ்கே அணி. மூன்று தசாப்தங்களில் கோப்பையை வென்ற ஒரே அணி என்கிற பெருமையும் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளது. ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா 5 முறையும் தோனி 4 முறையும் வென்றுள்ளார்கள். 

அதிக வயதில் (40 வருடங்கள், 100 நாள்கள்) ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் - தோனி. 

Tags : Dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT