ஐபிஎல்

குடும்பத்தினருடன் இணைந்து வெற்றியைக் கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்: நெகிழ்வான தருணங்களைக் காண வேண்டுமா? (விடியோ)

16th Oct 2021 04:32 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

ADVERTISEMENT

நேற்றைய போட்டி முடிவடைந்த பிறகு தோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவாவுடன் மைதானத்துக்குள் வந்து தோனியுடனும் இதர கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். மேலும் தோனியை அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார் சாக்‌ஷி. பிறகு சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரை மைதானத்துக்குள் அழைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். பலரும் தோனியுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் உணர்வுபூர்வமான தருணங்கள்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தையும் அதன்பிறகு பரிசளிப்பு விழா வரையிலான தருணங்களையும் ஹாட்ஸ்டார் இணையத்தளத்தில் முழு விடியோவாக (கிட்டத்தட்ட 7 மணி நேரம்) உள்ளன. இதனை இலவசமாகவே காண முடியும். 

 

Tags : Dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT