ஐபிஎல்

அதிக விக்கெட்டுகள்: முதல் 10 இடங்களில் 8 இடங்களைப் பிடித்த இந்திய வீரர்கள்

4th Oct 2021 05:51 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2021 லீக் சுற்று கடைசிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன. 4-ம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற 4 அணிகள் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்களில் ரஷித் கான் 12 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளுடன் 6- ம் இடத்தில் உள்ளார். கிறிஸ் மோரிஸ் 10 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளுடன் 9-ம் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

ஆர்சிபியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், 12 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 21 விக்கெட்டுகளுடன் அவேஷ் கான் 2-ம் இடத்திலும் ஷமி 18 விக்கெட்டுகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். இந்தப் பட்டியலில் முதல் 12 இடங்கள் வரை எந்தவொரு சிஎஸ்கே வீரரும் இல்லை. 13-வது இடத்தில் 13 விக்கெட்டுகளுடன் ஷர்துல் தாக்குர் உள்ளார்.

ஐபிஎல் 2021: அதிக விக்கெட்டுகள்

அவேஷ் கான்

1. ஷர்ஷல் படேல் - 26 விக்கெட்டுகள்
2. அவேஷ் கான் - 21 விக்கெட்டுகள்
3. ஷமி - 18 விக்கெட்டுகள்
4. பும்ரா - 17 விக்கெட்டுகள்
5. அர்ஷ்தீப் சிங் - 16 விக்கெட்டுகள்
6. ரஷித் கான் - 15 விக்கெட்டுகள்
7. வருண் சக்ரவர்த்தி - 15 விக்கெட்டுகள்
8. சஹால் - 14 விக்கெட்டுகள்
9. கிறிஸ் மோரிஸ் - 14 விக்கெட்டுகள்
10. ராகுல் சஹார் - 13 விக்கெட்டுகள்

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT